“புதிய கூட்டணி அமைய வாய்ப்பு, 4 முனைப் போட்டி; பொறுத்திருங்கள்'' – டி.டி.வி தினகரன்

Spread the love

 திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் தண்டபாணி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், ஒட்டன்சத்திரம் அமமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

அதில், “அதிமுகவில் எத்தனை உயர்வு தாழ்வுகள் வந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயக்கத்திற்கு வந்தபோதெல்லாம் எல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் ஆதரவாக இருந்தார். அனைவரும் விஜய் உடனான சந்திப்பை அரசியலாக பார்க்கிறீர்கள். நான் அவரைப்பற்றி கவனமாக பேச வேண்டும் என நினைக்கிறேன்.

செங்கோட்டையன்

1989 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போதே செங்கோட்டையன் பம்பரமாக செயல்பட்டார் அவர் ஒரு நல்ல நிர்வாகி. நான் பள்ளி செல்லும் போதே அரசியலுக்கு வந்தவர். 1999-ல் என்னை கோபி செட்டிபாளையத்தில் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஜெயலலிதாவிடம் சொன்னவர் செங்கோட்டையன்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

தற்போதும் துரோகத்தை நீக்குவதற்காக எங்களோடு பயணித்து கொண்டிருப்பவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட என்னோடு பேசினார். விஜயுடன் சேர்வது குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. கட்சியில் நீக்கப்பட்டதிலிருந்து மனவருத்தத்தில் இருந்தார். அவர் என்ன பேசுகிறார் என்பதை பொறுத்து தான் அவரை பற்றி பேசுவது சரியாக இருக்கும்.

நாங்கள் கூட்டணி சேர்வது குறித்து முடிவு செய்யவில்லை, ஆனால் கூட்டணி குறித்து மற்ற கட்சிகள் எங்களோடு பேசி வருவது உண்மை.

தமிழ்நாட்டு அரசாங்கம் மற்றும் ஆட்சியாளர்களை பிடிக்கிறதோ இல்லையோ மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைகளை தாய் உள்ளத்துடன் மத்திய அரசு அணுகி அந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

தற்போது நெல் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டுமென்பது விவசாயிகளின் கோரிக்கை. அதை தமிழக அரசிடம் சொல்கிறார்கள், அவர்கள் அதை மத்திய அரசிடம் கேட்கிறார்கள். இதில் அரசியல் பார்க்க கூடாது. மத்திய அரசு தமிழ்நாடு கேட்பதை கொடுப்பதுதான் சரியாக இருக்கும்.

தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்த கேள்விக்கு, ”தமிழ்நாட்டில் கிராமங்களில் இருந்து பல்வேறு மக்கள் நகரங்களுக்கு குடியேறி வருகின்றனர்.

இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு ஒரு கார் விற்பனையாகிறது என்றால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் தொலைநோக்கு பார்வையுடன் மெட்ரோ ரயில் திட்டம். கொண்டு வருவது மக்களின் நலன் கருதியே.

வருங்காலத்தில், பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கு மெட்ரோ ரயில் முக்கிய நகரங்களில் வருவது நல்ல திட்டம். இதற்கு மத்திய அரசு கண்டிப்பாக நிதி ஒதுக்க வேண்டும்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.டி.தினகரன்

தற்போது 4 முனைப் போட்டி உள்ளது. நீங்கள் எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்பட்டு புதிதாக கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அது குறித்து சில நகர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அதனால் அனைவரும் பொறுத்திருங்கள்” என்றார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *