புது தில்லி : இந்தியாவின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று(பிப். 17) புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
பிரதமர் தலைமையிலான 3 பேர் தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.