புதிய தொழிலாளர் சட்டம்:“இந்திய தொழிலாளர் வரலாற்றில் ஒரு கருப்புதினம்” – காங்கிரஸ் கடும் விமர்சனம் |New Labor Law: “A black day in the history of Indian labor” – Congress strongly criticizes

Spread the love

மேலும், தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 29 முக்கியமான சட்டங்களை ஒரே அடியில் களைந்து 4 சட்டங்களாகச் சுருக்கும் நடவடிக்கை, தொழிலாளர் வர்க்கத்தின் குரலையும் பாதுகாப்பையும் பறிக்கும் செயலாகும். இந்த மாற்றங்கள் தொழிலாளர்களுக்காக அல்ல. நாட்டின் பெருஞ்செல்வத்தை தன் வசம் வைத்துள்ள பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான அம்பானிக்கும், அதானிக்கும் திட்டமிட்டு கொண்டு வரப்படுகின்றன.

உழைப்பால் தேசத்தை வளர்க்கும் மக்களின் சுவாசத்தையும், துன்பத்தையும் இந்த ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக உள்ளது.


செல்வப் பெருந்தகை

செல்வப் பெருந்தகை

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் இந்திய தொழிலாளர் வரலாற்றில் ஒரு கருப்புதினமாகும், தொழிலாளர்களின் நலனையும், உயிர் பாதுகாப்பையும் பறிக்கும் இந்த சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். உழைக்கும் மக்களின் வியர்வையை நாட்டின் செல்வமாக மதிக்கும் அரசியல் பண்பாட்டை உருவாக்குவதே எங்கள் உறுதியான நிலைபாடு.

இந்த அநீதி நீங்கும் வரை, எங்கள் குரலும், எங்கள் போராட்டமும் தொடர்ந்தும் ஒலிக்கும். தொழிலாளர்களின் உரிமை காக்கப்படும் வரை நாம் ஒருபோதும் இந்த போராட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சட்டத்தை எதிர்த்து நாடுதழுவிய அளவில் 26-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *