புதிய படங்களைத் தொடங்க வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

Dinamani2f2024 10 292f18m0d4fy2fshooting.jpg
Spread the love

நவ. 1 முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் பணிகளைத் தொடங்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுவதால் திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் மாதம் 1-ஆம் (01.11.2024) தேதி முதல் புதிய படங்களைத் தொடங்க வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில் பல யூனியன்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக வந்துள்ளது. இன்னும் சில யூனியன்களிடம் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. அதை முழுமையாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *