புதிய யுஜிசி சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருக்கிறது. | The Supreme Court has issued an interim stay on the new UGC regulations

Spread the love

கல்வி நிலையங்களில், குறிப்பாக கல்லூரிகளில் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் பாகுபாடுகள் அதிகரித்திருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, 2012-ம் ஆண்டு சில விதிகளை அறிமுகப்படுத்தியது. அதற்குப் பிறகும் தொடர்ந்த அநீதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதன் அடிப்படியில், நீதிமன்ற ஆலோசனையின் பேரில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்த மாத தொடக்கத்தில் “உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026′ என்ற விதிமுறைகளை வெளியிட்டது. இந்த விதிகள் இந்தியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் (HEIs) பொருந்தும்.

யுஜிசி-க்கு எதிரான போராட்டம்

யுஜிசி-க்கு எதிரான போராட்டம்

இந்தப் புதிய விதி, எஸ்.சி/எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பதில் இது கவனம் செலுத்துகிறது. ஆனால், வட இந்திய மாநிலங்களில் இந்த புதிய விதிகளுக்கு எதிராக ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. மேலும், இந்தப் புதிய விதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *