பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய வருமான வரி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் பகுதி வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி முடிவடைகிறது. கூட்டத்தொடர் மார்ச் 10 ஆம் தேதி மீண்டும் கூடி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் புதிய வரி மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.