புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் முன்விரோதம்; Instagram ரீல்ஸால் கோபம்; இளைஞர் படுகொலையின் பின்னணி என்ன? | Pudukkottai: Anger over Jallikattu; Instagram reels spark anger; What is the background to youth’s murder?

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம், கீழ வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரது மகன் இன்பரசன் (வயது: 25). இவர், சென்ட்ரிங் வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார்.

மேலும், இவர் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வரும் நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரராகவும் இருந்து வந்துள்ளார்.

இன்னொருபக்கம், பொற்பனைக்கோட்டை, மணக்கொல்லை தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்(வயது: 21), தெற்கு இம்மனாம்பட்டி ரஞ்சித் மற்றும் இவர்களது நண்பர்கள் ஒன்றிணைந்து அன்பு பாய்ஸ் என்ற பெயரில் குழு அமைத்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது, ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசலில் இறங்கிப் பிடிப்பது உள்ளிட்டவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில்தான், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு ஜல்லிக்கட்டில் இன்பரசன், “அன்பு பாய்ஸ்’ பெயரில் அவிழ்க்கப்பட்ட காளையைப் பிடித்துள்ளார். இதனால், ‘அன்பு பாய்ஸ்’ இளைஞர்கள் கோபமடைந்திருந்தனர்.

மேலும், ‘அன்பு பாய்ஸ்’ காளையை அடக்கிய இன்பரசன், அந்த காளையை அடக்கியது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் உள்ளிட்டவற்றை வைத்துள்ளார். இதனால், மேலும் ‘அன்பு பாய்ஸ்’ இளைஞர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

இதற்கிடையில்தான் இன்பரசன் காளைகளைப் பிடிப்பதை நிறுத்திவிட்டு, காளை வளர்ப்பதில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இன்பரசன் வளர்க்கும் காளை எந்த ஜல்லிக்கட்டிலும் காளையர்களிடம் பிடிபடாத நிலையில், ‘அன்பு பாய்ஸ்’ இளைஞர்கள் அந்த ஜல்லிக்கட்டு காளையை வம்பு இழுத்து இன்ஸ்டா ரீல்ஸ், வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் உள்ளிட்டவற்றை வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை
D.DIXITH

இதனால், கோபமடைந்த இன்பரசன் கடந்தாண்டு, அக்டோபர் 20-ம் தேதி ராயப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வைத்து இன்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் ‘அன்பு பாய்ஸ்’ இளைஞர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக சம்பட்டி விடுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலரைக் கைது செய்த நிலையில், பின்னர் அவர்களும் பிணையில் வெளிவந்துள்ளனர்.

பின்னர், காவல்துறையினர் மற்றும் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் இன்பரசன் தரப்பினரையும், ‘அன்பு பாய்ஸ்’ இளைஞர்களையும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இரு தரப்பினருக்கும் எந்தவித பிரச்னையும் செய்யக்கூடாது என்று சமாதானம் பேசி முடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான், ‘அன்பு பாய்ஸ்’ இளைஞர்கள் இன்பரசன் மீது உள்ள கோபத்தை மனதிலேயே வைத்திருந்துள்ளனர். நேற்று புதுக்கோட்டை அடுத்த அழகம்மாள்புரத்தில் நடைபெற்று வரும் கட்டடப் பணிக்கு சென்ட்ரிங் வேலை செய்ய இன்பரசன் மற்றொரு நபருடன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *