இந்நிலையில், அம்மாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களோ,
“அந்தப் பெண்மணியைத் தாக்கவெல்லாம் இல்லை. உணவு வழங்க வழங்கப்பட்ட டோக்கனை ஜெராக்ஸ் எடுத்து வந்ததால், போலியாக உணவு டோக்கனை யாரேனும் அச்சடித்துக் கொடுக்கிறார்களோ என்ற சந்தேகத்தில்தான் அந்தப் பெண்ணின் பர்தாவைக் கழற்றச் சொன்னார்கள்.
பர்தாவைப் பிடித்து கிழிக்கவெல்லாம் இல்லை. இங்குள்ள பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் சாதாரணமாக நடந்ததிந்த நிகழ்வு குறித்த இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி, தேவையில்லாத பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.
எல்லோருக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் அந்த விழாவையே நடத்துகிறார்கள். அப்படி இருக்கையில் உணவு கேட்டு வந்த பெண்ணை அவமானப்படுத்துவார்களா? போலி டோக்கன் என்று சந்தேகப்பட்டு கேள்வி கேட்கப் போய், இப்படி வீண் பரபரப்பாகிவிட்டது” என்றார்கள்.
ஆனாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பதிவினைப் பார்த்த பலரும், அப்பெண்ணின் ஆடையைக் கிழித்து, அவரை அடித்து துன்புறுத்தினார்களா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.