புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா! – முதல்வர் ரங்கசாமியுடன் கூட்டணி குறித்து ஆலோசனை

Spread the love

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு கூட்டணிகளை இறுதி செய்யும் பணிகளில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. அதனடிப்படையில் நேற்று திருச்சிக்கு வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று காரைக்காலுக்கு வருகிறார்.

திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் காரைக்கால் வரிச்சிகுடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வந்து இறங்கும் அமித் ஷா, அங்கிருந்து கார் மூலம் நகராட்சி திடலில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

முதல்வர் ரங்கசாமி

முதல்வர் ரங்கசாமி

அதன்பிறகு திருநள்ளாறு சாலையிலுள்ள தனியார் விடுதியில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளை சந்தித்துவிட்டு முதல்வர் ரங்கசாமியை சந்திக்கிறார். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கூட்டணியை இறுதி செய்யாமல் இழுத்தடித்து வரும் ரங்கசாமியிடம், அவரது கோரிக்கைகளையும், கருத்துகளையும் கேட்கிறார்.

அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அமித் ஷா வருகையையொட்டி ஏழு பட்டாலியன் துணை ராணுவப் படையினருடன், சுமார் 700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *