புதுச்சேரியில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா | Foundation stone laid for construction of Kalaignar Arivalayam at ECR, Puducherry

Spread the love

புதுச்சேரி: புதுச்சேரியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா இன்று நடந்தது.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் புதுச்சேரியில் திமுகவுக்கு கிழக்கு கடற்கரைச்சாலையில் சிவாஜி சிலை அருகேயுள்ள கட்சிக்கு சொந்தமான 3000 சதுர அடி இடத்தில் கலைஞர் அறிவாலயம் கட்ட அனுமதி தந்தனர்.

அதைத்தொடர்ந்து திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிக்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு புதுச்சேரி நகர வளர்ச்சிக் குழுமத்திடம் அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்ததையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா புதுச்சேரி திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடந்தது.

இவ்விழாவில் அவைத்தலைவர் எஸ்பி சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *