புதுச்சேரியில் பாண்லே ஐஸ்கிரீம் பொருட்களின் விலை உயர்வு: திங்கள் முதல் அமல்  | puducherry ponlait icecreams price hike

1358825.jpg
Spread the love

புதுச்சேரி: புதுச்சேரியில் பாண்லே ஐஸ்கிரீம் பொருட்களின் விலை நாளை முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால், தயிர், நெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் புதுச்சேரி முழுதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சுவை, தரம் காரணமாக இந்த பொருட்களுக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பாண்லே ஐஸ்கிரீம் பொருட்களில் விலை திங்கள் (ஏப்.21) உயர்த்தப்படுவதாக பாண்லே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சம் ரூ. 70 வரை உயர்த்தப்படுகிறது. குறிப்பாக ரூ. 7-க்கு விற்கப்பட்ட‌‌ வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.8-கவும், ரூ.35-க்கு விற்கப்பட்ட குல்பி ரூ.40-கவும், பட்டர் ஸ்காட்ஸ் 90 எம்எல் ரூ. 25-ல் இருந்து ரூ. 30- ஆகவும், 500 எம்எல் வென்னிலா ஐஸ்கிரீம் ரூ.100-ல் இருந்து ரூ.120-கவும்‌, 1 லிட்டர் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ரூ. 180-ல் இருந்து ரூ. 250 என அதிகபட்சமாக ரூ. 70 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது‌.

இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக பாண்லே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *