புதுச்சேரி: புதுச்சேரியில் மழை மற்றும் காற்றின் அளவு அதிகரித்து வருவதால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சால் புயல் புதுச்சேரியில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. பெஞ்சால் புயலானது 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இது இன்று மாலை கரையை கடக்க்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணாமாக புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. குறிப்பாக பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, நல்லவாடு, மூர்த்தி குப்பம் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
காவல்துறையினர் தடுப்புகளை வைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் தரைக்காற்று ஆனது 60 கிலோமீட்டர் இருந்து 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது . கடல் அலையானது 5 அடி முதல் 6 அடி வரை அதிகரிப்பதால் மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுந்து வருகிறது.,
புயல் நெருங்க நெருங்க காற்றின் வேகமும் கடல் சீற்றமும் அதிகரிக்கும் என்பதால் கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தளங்கள் முழுமையாக மூடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் தற்போது சாரல் மலையானது அதிகரித்து மிதமான மழை பெய்து வருகிறது.