புதுச்சேரி சுற்றுப்பயணம் தள்ளிவைப்பு : அனுமதி கிடைக்கத்தால் விஜய் விரக்தி  – Kumudam

Spread the love

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயார் ஆகி வந்தது. இதன் ஒருகட்டமாக தமிழகம் முழுவதும் மக்கள் பயணத்தை விஜய் மேற்கொள்ள திட்டமிட்டு, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு இருந்தார்.

கரூர் நெரிசல் சம்பவத்திற்கு தமிழகத்தில் தனது சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் விஜய் நிறுத்தி வைத்திருந்தார். இதனிடையே காஞ்சிபுரத்தில் உள் அரங்கில் மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார். மீண்டும் தமிழகத்தில் சேலத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள அம்மாவட்ட காவல்துறையிடம் தவெக நிர்வாகிகள் அனுமதி கடிதம் அளித்து இருந்தனர். 

இதே போன்று டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்த தவெக திட்டமிட்டு இருந்தது. இதற்காக புதுச்சேரி முதல்வர், காவல்துறை என 4 முறை அனுமதி கேட்டு புஸ்ஸிஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் கடிதம் அளித்து இருந்தனர். 

ஆனால் விஜய் சுற்றுப்பயணத்திற்கு  அனுமதி அளிக்காமல் இருந்து வந்த நிலையில், ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்க முடியாது என புதுச்சேரி டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார். வேண்டும் என்றால் தவெக பொதுக்கூட்டம் மட்டும் நடத்தி கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ரோடு ஷோவிற்கு அனுமதி கிடைக்கத்தால் தவெக தலைவர் விஜய் விரக்தி அடைந்துள்ளார். இதனால் புதுச்சேரியில் டிச 5-ம் தேதி நடத்த இருந்த சுற்றுப்பயணத்தை விஜய் தள்ளி வைத்துள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *