விமான நிலையத்தில் செய்தியாளர்கள் துரத்தித் துரத்தி வந்தபோதும் திரும்பிப் பார்த்து நாலு வார்த்தை ஆறுதலாகப் பேசத் தயங்கிய புதுக் கட்சி தலைவரை தனியா பேட்டி காண்பதற்கு, சேனல், பத்திரிகை, யூ டியூப் என முப்பதுக்கும் மேற்பட்ட லீடிங் பார்ட்டிகள் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறார்களாம். ஆனால், தலைவர் பிடிகொடுக்க மறுக்கிறாராம்.
இதனால், பத்திரிகையுடன் சேர்த்து புதிதாக சேனலும் நடத்தும் பாரம்பரிய மீடியாக் கம்பெனியினர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, “அவரு எங்கள நேர்ல கூட பாத்துப் பேசவேண்டாம். கேள்விகளை அனுப்புறோம். நீங்களே அவருக்கிட்ட கேட்டு வீடியோ ஷூட் பண்ணிக் குடுங்க” என்று கேட்டுப் பார்த்தார்களாம். அதற்கும் ரெஸ்பான்ஸ் இல்லையாம்.
மீடியா மக்களை சந்திக்க தலைவர் தயாராய் இருந்தாலும் அவரை புரமோட் செய்வதாக நினைத்து குண்டக்க மண்டக்க எதையாவது செய்து வகையாய் வாங்குப்படும் ‘வகுப்பாளர்கள்’கள் தான் “இப்பவே பேட்டி அது இதுன்னு பிரஸ்ஸ மீட் பண்ணி சிக்கல்ல மாட்டிக்க வேண்டாம். சும்மாவே ட்ரோல் பண்றவங்க, அப்புறம் அதையும் வெச்சு ஓட்டுவாங்க. அதனால, அதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம்” என்று அட்வைஸ் செய்து, ஆனானப்பட்ட தலைவருக்கே வாய்ப்பூட்டு போட்டு வைத்திருக்கிறார்களாம்.