புது டெல்லியில் ஏ.ஐ உச்சி மாநாடு: இந்தியாவின் தொழில்நுட்ப சக்தி|AI Impact Summit 2026: AI World Meets in New Delhi: India Takes the Spotlight

Spread the love

ஏ.ஐ உச்சி மாநாடு (AI Impact Summit 2026) – இந்தியாவின் புது டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது. இந்த மாநாடு வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) வரை நடக்க உள்ளது.

இதுவரை இங்கிலாந்து, தென் கொரியா, பிரான்ஸில் நடந்த இந்த மாநாடு, முதல் முறையாக உலகின் தென் நாடுகளில் ஒன்றில் நடக்கிறது. இதனாலே, இந்தியாவில் நடக்கும் இந்த மாநாடு சற்று ஸ்பெஷலானது.

இந்த உச்சி மாநாட்டின் தீம், “அனைவருக்கும் வளம்… அனைவருக்கும் ஆனந்தம்’.

இந்த உச்சி மாநாட்டில் 15 – 20 நாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

மேலும், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, OpenAI-ன் சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட பல நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மிக மிக முக்கியமானது ஏ.ஐ.

ஏற்கெனவே ஏ.ஐ பயன்பாட்டில் டாப் இடத்தில் உள்ளது இந்தியா. இது போக, ஏ.ஐ-க்கான உச்சி மாநாடு இந்தியாவில் நடக்கும் போது, ‘இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பை’ உலகத்திற்கு எடுத்துக்காட்டும்.

அடுத்ததாக, உலகம் முழுவதும் பல தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொள்வதால், இந்தியாவின் தொழில் பிரிவில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இது பெரும் கலங்கரை விளக்கமாக இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *