சூரல்மலை மற்றும் முண்டைக்கை இடையே காலை 6 முதுல் 9 மணி வரை பெய்லி பாலம் வழியாக 1500 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை, டிரோன்கள் மூலம், மண்ணில் உடல்கள் ஏதேனும் புதைபட்டிருக்கிறதா என்பதை ராணுவத்தினர் தேடி மண்ணுக்குள் புதைந்திருந்த உடல்களை தேடி எடுத்தனர். மேலும் இன்றும் அந்தப் பணிகள் தொடர்கின்றன.
வயநாடு மாவட்டத்தில், ஒரு வார காலத்துக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்கள் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் 4 மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புதுமலை பகுதியில் அடையாளம் தெரியாத 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
இன்று, புதுமலைப் பகுதியில் அடையாளம் தெரியாத 31 உடல்கள் மற்றும் 158 உடல் பாகங்களை நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. காணாமல் போனவர்களின் பட்டியலை அங்கன்வாடி மையங்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று பெரிய அளவில் அதிக உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.