புத்தாண்டு: வேளாங்கண்ணி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்

Dinamani2fimport2f20212f12f72foriginal2findian Railways Ptiq.jpg
Spread the love

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வெளிமாநிலங்களிலிருந்து வேளாங்கண்ணி, கன்னியாகுமரிக்கு திங்கள்கிழமை (டிச.30) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு செகந்திராபாதிலிருந்து வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை (டிச.30) சிறப்பு ரயில் (எண் 07125) இயக்கப்படவுள்ளது. செகந்திராபாதில் இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து புதன்கிழமை (ஜன.1) இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07126) மறுநாள் இரவு 10.45 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இதில் 6 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், 6 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் குண்டூா், தெனாலி, ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூா், நாகை வழியாக இயக்கப்படும்.

கா்நாடக மாநிலம் ஹூப்ளியிலிருந்து டிச.30, ஜன.6, 13 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை தோறும்) மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07367) மறுநாள் பிற்பகல் 3.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியிலிருந்து டிச.31, ஜன.7, 14 ஆகிய தேதிகளில் இரவு 7.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07368) மறுநாள் இரவு 7.35 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இதில் 8 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 5 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் காவேரி, ஹரிஹா், பிரூா், யஷ்வந்த்பூா், பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *