இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. பல நகரங்களில் மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும்.
2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிகழ்வை உலகமே கொண்டாடத் தயாராகி வருகிறது. பலரும் அவரவருக்கு உரிய முறையில் புத்தாண்டை வரவேற்கத் தயாராவார்கள்.
எல்லா ஆண்டும் ஒன்றுபோலவே இருந்தாலும், ஒவ்வொரு முறையும் புத்தாண்டை வரவேற்கத் தவறுவதில்லை மக்கள். பலரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வது, விருந்து கேளிக்கை என கொண்டாடி மகிழ்வதும் உண்டு.
அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு பற்றி பலருக்கும் தெரிந்திருக்கலாம். அது நியூ ஸிலாந்துதான். ஆனால், அதற்கு முன்பே, கிறிஸ்துமஸ் தீவு எனப்படும் கிரிபதி குடியரசு என்ற ஒரு சிறிய தீவில்தான் உலகிலேயே முதன் முதலில் புத்தாண்டு பிறக்கும். பிறகு, நியூ ஸிலாந்தின் சத்தம் தீவில் புத்தாண்டு பிறக்குமாம். அதன்பிறகுதான் நியூ ஸிலாந்தின் பிற பகுதிகளில் புத்தாண்டு பிறக்கிறது. அதாவது இந்திய நேரப்படி டிசம்பர் 31ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கே இங்கு புத்தாண்டு பிறந்துவிடுகிறது. நியூ ஸிலாந்தில் இன்று மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு பிறந்துவிடுகிறது.