நல்ல வாய்ப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் வங்கதேசம் விளையாடவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என அந்த அணியின் முன்னாள் வீரர் இம்ருல் கேயிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி மிகவும் சிறந்த அணி. இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் அதன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டுமே வலுவாக உள்ளது. ஆனால், இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணிக்காக பும்ரா என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்த்திருக்கிறோம்.