இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.