புயலாக மாற வாய்ப்பு : தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட்  – Kumudam

Spread the love

தமிழகத்தில் பல்வேறு நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகை, கரூர், அரியலூர், மதுரை, கடலூர் ஆகிய 17 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.,24) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மாநிலத்தின் ஓரிரு இடங்களில் 120 மி.மீ. முதல் 200 மி.மீ. வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், அடுத்த 7 நாள்களுக்கு தமிழகம், புதுவை பகுதிகளில் மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *