நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார்.
எதிர்பார்த்தபடியே இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்தார்.
செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவுக்குப் பக்கபலமாக நின்றவர்.

மூத்த அரசியல் தலைவரும், அதிமுக தொண்டர்களின் மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவரான செங்கோட்டையன் இப்போது தவெகவில் இணைந்திருப்பது அரசியலில் பெரும் திருப்பமாக அமைந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர், இப்போது விஜய்யை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார். விஜய்யின் தவெக அரசியல் பயணத்தில் மிகப்பெரிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.