புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு | HC order to tn govt given time to set up Archaeological Monuments Commission

Spread the love

சென்னை: தமிழகத்​தில் உள்ள பாரம்​பரிய, தொல்​லியல் சிறப்பு மிக்க கோயில்​களை பாது​காக்​கும் வகை​யில் மாநில அளவில் புராதன சின்​னங்​கள் ஆணை​யம் அமைக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்​ளது.

திரு​வண்​ணா​மலை அருணாச்​சலேஸ்​வரர் கோ​யில் ராஜகோபுரம் முன்​பாக வணி​கவளாகம் கட்ட எதிர்ப்பு தெரி​வித்து ஆலய வழி​பாட்டு குழுத் தலை​வ​ரான மயி​லாப்​பூர் டி.ஆர்​.ரமேஷ் உள்​ளிட்​டோர் தொடர்ந்த வழக்​கு​களை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம் புராதன, தொல்​லியல் சிறப்பு மிக்க கோ​யில்​களை​யும், அவற்​றின் கட்​டு​மானங்​களை​யும் பாது​காக்​கும் வகை​யில் மாநில புராதன சின்​னங்​கள் ஆணை​யத்தை 4 வார காலத்​துக்​குள் அமைக்க வேண்​டுமென தமிழக அரசுக்கு கடந்த அக்.9 அன்று உத்​தர​விட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், எஸ். சவுந்​தர் ஆகியோர் அடங்​கிய சிறப்பு அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அறநிலை​யத்​துறை தரப்​பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்​.ஆர்​.ஆர்​.அருண் நடராஜன், ” மாநில அளவி​லான புராதன சின்​னங்​கள் ஆணை​யம் அமைப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை அரசு தொடங்​கி​யுள்​ளது என்​றும், இப்​பணி மூன்று மாதங்​களில் முடிக்​கப்​பட்டு ஆணை​யம் அமைக்​கப்​படும்.

மேலும் வரும் டிச.3-ம் தேதி​யன்று திரு​வண்​ணா​மலை​யில் பிரசித்தி பெற்ற கார்த்​திகை தீபத்​திரு​விழாவை முன்​னிட்டு 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் அங்கு திரளக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​வ​தால் அதற்​கான தரிசன ஏற்​பாடு​களை செய்ய அனு​ம​திக்க வேண்​டும் என கோரி​னார்.

அதையடுத்து நீதிப​தி​கள், திரு​வண்​ணா​மலை மட்​டுமின்றி தமிழகத்​தின் பிற புராதன சிறப்பு மிக்க கோயில்​களி​லும் பழமை மாறாமல் புதுப்​பிக்க வேண்​டியது அவசி​ய​மானது. அதற்கு மாநில அளவி​லான புராதன சின்​னங்​கள் ஆணை​யம் அமைப்​பது அத்​தி​யா​வசி​ய​மானது. அந்த ஆணை​யம் அமைக்​கப்​படும் வரை திரு​வண்​ணா​மலை​யில் மேற்​கொண்டு எந்​தவொரு கட்​டு​மானங்​களும் மேற்​கொள்​ளக்​கூ​டாது என தடை​ உத்​தரவை நீட்​டித்து உத்​தர​விட்​டுள்​ளனர்.

மேலும், புராதன சின்​னங்​கள் ஆணை​யம் அமைக்க தமிழக அரசுக்கு ஒரு​மாத காலம் அவகாசம் வழங்​கிய நீதிப​தி​கள், கார்த்​திகை தீபத்​திரு​விழாவை முன்​னிட்டு தற்​காலிக​மாக திரு​வண்​ணா​மலை​யில் தேவை​யான மாற்று ஏற்​பாடு​களை செய்து கொள்ள அறநிலை​யத்​துறைக்கு அனு​ம​தி​யளி்த்து விசா​ரணையை வரும் டிச.18-க்கு தள்ளி வைத்​தனர்.

இதே​போல சிதம்​பரம் நடராஜர் கோயில் கனகசபை​யி்ல் நின்று பக்​தர்​கள் தரிசனம் மேற்​கொள்ள அனு​மதி வழங்கி பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கு​களை விசா​ரித்த நீதிப​தி​கள், இந்த பிரச்​சினைக்கு பொது தீட்​சிதர்​கள் தான் தீர்வு காண வேண்​டும், என அறி​வுறுத்தி வழக்கு விசா​ரணையை டிச. 11-க்கு தள்ளி வைத்​துள்​ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *