`தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்” என பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருப்பது தமிழக அரசியல் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. ‘தந்தைக்கு உடல்நிலை சரியில்லை’ என அவர் சொன்னாலும் இந்த அறிவிப்புக்கு பின்னே சில அரசியல் மூவ் இருப்பதாக சொல்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்!
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க, பா.ம.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை கட்டியிருக்கிறது பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை வகித்தாலும், 234 தொகுதிகளுக்கும் 72 தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
அவர் வெளிட்ட பட்டியலில் அண்ணாமலைக்கு சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளை கண்காணிக்கும் பொறுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலர், “தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் சில கண்டிஷன்களை விதித்திருக்கிறது டெல்லி. அதன்படி ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதிகளுக்கு இருமுறை பயணித்து, இரு தினங்கள் தங்கி தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.