மோசமான வானிலை காரணமாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான டேர் கிராமத்தில் இருந்து புணேவுக்கு வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் ஹெலிகாப்டர் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.
ஹெலிகாப்டரில் பயணம் செய்த முதல்வரும் மற்றவர்களும் பத்திரமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சதாரா காவல்துறை கண்காணிப்பாளர் சமீர் ஷேக் கூறுகையில், “ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் மாலை 4 மணியளவில் புறப்பட்டது, ஆனால், மீண்டும் சிறிது நேரத்தில் அங்கேயே திரும்பியது.