புழல் சிறையில் இருந்து ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ  – Kumudam

Spread the love

கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.சிவசாமிக்கு ஹிரி நாடார் போலி செக் அளித்ததாக புகார் அளித்து இருந்தார்.  இது குறித்த புகாரின்பேரில், செந்தில்வாசன், ஹரி நாடாா், காா்த்திகேயன் ஆகியோரை கைது செய்த பீளமேடு போலீஸாா், தலைமறைவாக உள்ள அன்புசெல்வன், ஆண்டனி ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

இதில் கைது செய்யப்பட்ட செந்தில்வாசன் கோவை மத்திய சிறையிலும், ஹரி நாடாரும், காா்த்திகேயனும் மற்றொரு மோசடி வழக்கில் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், புழல் மத்திய சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

அதில், அரசியல் சூழ்ச்சி காரணமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதற்காகவே தன் மீது போலீசார் பொய் வழக்கில் சென்னை புழல் மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருந்து வருகிறேன்.

இதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வரும் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், இந்த வழக்கில் சிக்கி உள்ள அனைவருக்கும் சாகும் வரை கடுங்காவல் தண்டனை விதிக்க வேண்டும். கருணைகள் காட்டாமல் எந்தவித சலுகைகளும் வழங்கக்கூடாது என நீதிபதி வலியுறுத்தி புழல் சிறையில் இருந்து ஹரி நாடார் ஆடியோ வெளியிட்டு உள்ளார். 

இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆடியோ எப்படி பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து புழல் சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *