எல்லாப் படத்திலும் நல்லவனா இருக்கிற சிவக்குமார் இதுல கெட்டவன் … எல்லாப் படத்திலும் கெட்டவனாக இருக்கிற ரஜினி இதுல நல்லவன்.. என்பது படத்துக்கு மிகப்பெரிய பலம். எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாத மிக நேர்த்தியான திரைக்கதை . படம் கருப்பு வெள்ளை தான் ஆனாலும் ஒளிப்பதிவு கொள்ளை அழகு .
“அப்பாவி காதலனாய் அன்பில் காதலிக்காக காத்து நின்று கனிவதாகட்டும் … காதலியை இழந்து சிறகு உடைந்து நிற்கும் கையறு நிலை ஆகட்டும்…
உயிர் காக்கும் நண்பனின் தவறுகளுக்கு தார்மீக துணையாக நின்றாலும் உள்ளே மனம் வெதும்புவதாகட்டும்…
‘அண்ணே’,’ நாகராஜ் அண்ணே’ என்று கரம் கூப்பி சிவக்குமாரிடம் தத்துவம் பேசுவதாகட்டும்..
(அண்ணே’,’ நாகராஜ் அண்ணே ‘என்ற வசனம் பின்னாளில் கொடி கட்டி பறந்த ரஜினி யிசத்தின் துவக்கம் ன்னே சொல்லலாம்)
சுமித்ராவிடம் ஏக்கமிகுந்த குரலில் தன் தாபங்களை வெளிப்படுத்தி தவிப்பினை உணர்த்துவதாகட்டும்…
படம் முழுக்க ரஜினி ‘கதகளி’ ஆடுவார். கை விரல்களை அப்படி இப்படின்னு சொடுக்கி வசனம் பேசற ஸ்டைல் ‘ச்சோ ஸ்வீட்’
ஆரம்பத்தில் அன்புக்காக உருகும் காதலனாய்…
காதலியை காப்பாற்ற இயலாத சாதாரண மனிதனாய்…
சிவக்குமாரிடம் ஏற்படும் பாசத்தினால் அவர் செய்யும் பாவக்காரியங்களை எடுத்து கூறும் நல்லவனாய்..
அவருக்காக தன் வாழ்வையே தியாகம் செய்யும் நண்பனாய்… நடிப்பின் வெவ்வேறு பரிமாணங்களில் வெளுத்து வாங்குவார் ரஜினி
இப்படியாக அந்தப் படத்தில் ஆரம்பித்த அவர் மீதான காதல் இன்னமும் தொடர்கிறது … இனியும் தொடரும்… அவரின் தாடி (வேற லெவல் ) பொருத்தம்.
தன்காதலியின் நினைவுகள் இளமையின் உணர்வுகளை ஒரளவு கட்டுப்படுத்திவைத்திருப்பதையும், ,காலம் அதனை மறக்கடித்து உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடுவதையும் சுமித்ராவிடம் சொல்லும் போது, ரஜினியை பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும்.
அண்ணே நாகராஜ் அண்ணே…கடப்பாரையவே முழுங்கிட்டியண்ணே… அண்ணே இதை ஏப்பம் விட்டுட முடியாது.