பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 7,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் | 7000 cubic feet of surplus water released from Poondi Lake per second

1381204
Spread the love

திருவள்ளூர்: வடகிழக்கு பரு​வ​மழை தீவிரம் காரண​மாக நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர்​வரத்து அதி​கரிப்​பால், சென்னை குடிநீர் ஏரி​களில் ஒன்​றான பூண்டி ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி​யாக அதிகரிக்​கப்​பட்​டுள்​ளது. அதே நேரத்​தில் புழல் ஏரியி​லிருந்து உபரிநீர் வெளி​யேற்​றம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

வடகிழக்கு பருவ மழை காரண​மாக சென்னை குடிநீர் ஏரி​களில் ஒன்​றான பூண்டி ஏரிக்​கு, நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து அதி​கள​வில் நீர்​வரத்து தொடங்​கிய​தால், பூண்டி ஏரி முழு கொள்​ளளவை எட்​டும் நிலை​யில் இருந்​தது. பாது​காப்பு கருதி முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக, கடந்த 15-ம் தேதி மதி​யம் முதல் பூண்டி ஏரி​யில் இருந்து உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது.

நேற்று காலை 6 மணியள​வில் பூண்டி ஏரிக்​கு, நீர்​வரத்து விநாடிக்கு 3,970 கன அடி​யாக​வும், ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி​யாக​வும் இருந்​தது. இதனால், 3,231 மில்​லியன் கனஅடி கொள்​ளளவு, 35 உயரம் கொண்ட பூண்டி ஏரி​யின் நீர்​இருப்​பு, 2,601 மில்​லியன் கன அடி​யாக​வும், நீர்​மட்ட உயரம், 33.27 அடி​யாக​வும் இருந்தது.

நீர்ப்​பிடிப்பு பகு​திகளில் இருந்து நீர்​வரத்​து, விநாடிக்கு 5,500 கனஅடி​யாக இருந்​தது. ஆகவே, அப்​போது பூண்டி ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, பூண்டி ஏரி​யின் உபரிநீர் செல்​லும் கொசஸ்​தலை ஆற்​றின் இரு கரையோரங்​களில் தாழ்​வான பகு​தி​களில் வசிக்​கும் மக்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை குடிநீர் ஏரி​களில், மற்​றொரு ஏரி​யான புழல் ஏரி 3,300 மில்​லியன் கன அடி கொள்​ளள​வும், 21.20 அடி உயர​மும் கொண்​டது. இந்த ஏரிக்​கு, வடகிழக்கு பரு​வ​மழை​யால் நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர்​வரத்து உள்​ளது.

நேற்று காலை 6 மணி நில​வரப்​படி, 3,300 மில்​லியன் கனஅடி கொள்​ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரி​யின் நீர்​இருப்பு 2,674 மில்​லியன் கனஅடி​யாக​வும், நீர்​மட்ட உயரம் 18.33 அடி​யாக​வும், நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர்​வரத்து விநாடிக்கு 265 கன அடி​யாக​வும் இருந்​தது. இதையடுத்​து, நேற்று காலை புழல் ஏரியி​லிருந்து உபரிநீர் வெளி​யேற்றப்படுவதை நீர்வள ஆதா​ரத் துறை​யினர் நிறுத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *