இந்த நிலையில் பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது திங்கள்கிழமை காலை நிலவரப்படி 33 அடி உயரமும், 2,521 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. மேலும், கடந்த 4 நாள்களாக மழை பெய்யாத நிலையில் ஏரிக்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நீர் வரத்து 7320 கன அடியாக குறைந்தது. அதனால், இந்த ஏரியிலிருநது உபரி நீர் திறப்பு 8500 கன அடியாக குறைந்தது.
அதேபோல் புழல் ஏரியில் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவில், 2854 மில்லியன் கன அடி இருப்புள்ளது. மேலும் மழை நீர் வரத்து 550 ஆக குறைந்ததால், உபரிநீர் திறப்பு 1209 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் 1081 மில்லியன் கன அடியில், 0336 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் 0.500 மில்லியன் கன அடியில், 0382 மில்லியன் கன அடி கொள்ளளவு நீர் இருப்பு உள்ளது.