திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவேந்தல் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியதாவது, “காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருவரும் எம்பி ஆகிவிட்டனர். இதனால் மற்றவர்கள் எம்எல்ஏ ஆகவில்லையென்றாலும் பரவாயில்லை என அதில் பங்கு கொடு, இதில் பங்கு கொடு எனக் கேட்கிறார்கள்.
இதையெல்லாம் நம்முடைய தலைமை புரிந்துகொண்டு இவர்களுக்கு சீட்டே கொடுக்கக் கூடாது. நாமும் கொடுக்க விடக் கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால் நாம் இல்லை என்றால் இந்தியா கூட்டணியே கிடையாது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோரால்தான் இந்தியா கூட்டணியே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டுகள்தான் இருக்கிறது.

பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு அதிக அளவு பங்கு கொடுக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.