பெங்களூரில் தோல்விக்குப் பிறகு ஆர்சிபி கேப்டன் பேசியதென்ன?

Dinamani2f2025 04 032fs0yi74eu2fgnigseuacaegbd9.jpg
Spread the love

ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அபார வெற்றி பெற்றது.

சொந்த மண்ணில் தோல்வியுற்றது குறித்து ஆர்சிபி கேப்டன் பேசியதாவது:

200 ரன்களை இலக்காக நிர்ணயிக்க விரும்பவில்லை, மாறாக பவர்பிளேவுக்குப் பிறகு 190 ரன்கள் எதிர்பார்த்தோம். ஆனால், விரைவிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்ததால் இந்தப் போட்டியை பாதித்தது.

பேட்டர்கள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறோம்

பேட்டர்களின் எண்ணம் சரியாக இருந்தது. ஆனால், பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்திருக்க வேண்டியதில்லை. ஒரு விக்கெட்டை கூடுதலாக இழந்தோம்.

இரண்டாம் பாதியில் பிட்ச் நன்றாக இருந்தது. இந்த இலக்கை கட்டுப்படுத்த பந்துவீச்சாளர்கள் சிறப்பாக முயன்றார்கள். 18ஆவது ஓவர் வரை சென்றது பார்க்க நன்றாக இருந்தது.

ஜிதேஷ், லிவிங்ஸ்டன், டிம் டேவிட் விளையாடிய விதம் எங்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்களது பேட்டிங் குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். பேட்டர்கள் காட்டிய நேர்மறையான நோக்கம் எங்களுக்கு நல்லதுதான் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *