இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடனும் “Music for Meals’ என்ற தலைப்பில் நேற்று (ஜன.11) பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வயது, மொழி என எந்த வேறுபாடும் இன்றி, அனைவரையும் இளையராஜாவின் இசை ஒன்றிணைத்திருக்கிறது.
இளையராஜாவின் பிரபலமான பாடல்கள், காலத்தை வென்ற மெலடிகள் ரசிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன.