பெங்களூரு: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கேட்டரிங் பெண்!

Dinamani2f2025 02 212fb4j66cfx2ftnieimport202183originalstoprapeimage.avif.avif
Spread the love

பெங்களூரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

தில்லியைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் பெங்களூரில் கேட்டரிங் தொழிலில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஒரு கல்லூரி சந்திப்பின்போது பழக்கம் ஏற்பட்ட நால்வரின் அழைப்புக்காக வியாழக்கிழமை இரவு விருந்துக்கு ஒரு ஹோட்டலுக்கு பெண் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஹோட்டலில் அந்த பெண்ணைச் சந்தித்த நால்வரும் சேர்ந்து பெண்ணை பாலியன் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். மறுநாள் காலையில் பெண்ணை விடுவித்த நிலையில், காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வரும் 20 வயதுக்குள்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களில் மூவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள், மற்றொருவர் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் காவல் அதிகாரி கூறினார். நால்வரும் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இதையும் படிக்க: கணவருடன் மீண்டும் இணையும் நடிகை நிக்கி கல்ராணி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *