மோசடி பேர்வழிகள் முதியவரை டிஜிட்டலில் கைது செய்தனர். மேலும் அழைப்பைத் துண்டிக்க வேண்டாம் என்றும், இது குறித்து யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்றும் எச்சரித்தனர்.
பல மொபைல் எண்களில் இருந்து வீடியோ கால் செய்தார்கள். அழைப்புகளின் போது, சிபிஐ அலுவலகம் போன்று வடிவமைக்கப்பட்ட அறையில் போலிஸ் சீருடை அணிந்து இருந்த நபர்களை விசாகன் பார்த்தார்.
விசாகன் தான் நிரபராதி என்றும், தனக்கும் ஆள் கடத்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் மோசடிக்காரர்களிடம் தொடர்ந்து விளக்கமளித்தார். ஆனால், அவர்கள் அவருக்கு உதவுவது போல நடித்தே அவரை நம்பவைத்தனர்.
இந்த வழக்கு மிகவும் தீவிரமானது என்றும், இது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் கூறி அவரை மேலும் பயமுறுத்தியுள்ளனர். அதோடு தங்களுக்கு ஒத்துழைத்தால், இந்த விவகாரத்தைத் தீர்த்துவிடலாம் என்று ஆசை காட்டியுள்ளனர்.
இந்த மிரட்டல்களால் நிலைகுலைந்த முதியவரிடமிருந்து அவரது வங்கி விவரங்களைச் சேகரித்த மோசடிக்காரர்கள், அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதனால் டிசம்பர் 17 முதல் பிப்ரவரி 23 வரை, முதியவர் அவர்கள் சொன்ன வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 4.9 கோடிக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்தார். அவரது மனைவியுடன் சேர்ந்து எடுத்திருந்த வைப்புத்தொகை ரூ.92 லட்சத்தையும் அனுப்பி வைத்தர.
அனைத்து பரிவர்த்தனைகளும் RTGS மூலம் செய்யப்பட்டன. அப்படி இருந்தும் தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்தனர். தனது சேமிப்பு அனைத்தும் தீர்ந்த பிறகு முதியவர் தனது நண்பரிடம் கடன் கேட்கச் சென்றபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார். இதையடுத்து மார்ச் 8-ம் தேதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து பணத்தை முடக்க (Freeze) போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.