பெட்ரோல்,டீசல் விலை உயர வாய்ப்பு ? விலைவாசி உயரும், அனைத்து தரப்பையும் பாதிக்கும் மக்கள் கருத்து – Kumudam

Spread the love

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதோடு கடுமையாக விலை உயரவும் வாய்ப்பு உள்ளது. இந்த விலை உயர்வு குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

கந்தன் – தனியார் நிறுவன ஊழியர் : பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், விலைவாசியும் தானாக அதிகரிக்கும். இதனால் அன்றாட மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. போர் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சைக்கிளிலும், நடந்து செல்ல வேண்டிய நிலை தான் ஏற்படும்.

மோகன் – பிசினஸ் மேன்: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் கட்சி தலைவர் எதிர்ப்போடு நிறுத்தி கொள்வார்கள். அவர்களுக்கு அரசியல் செய்ய வேண்டும் அவ்வளவு தான். ஆனால் பெட்ரோல் விலை ஏற்றம் கண்டால் அத்தியாவசிய பொருட்கள் விலை தான் ஏறும். ஆளும் அரசுகள் தான் விலையை உயராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சசிகலா- இல்லதரசி: அடிதட்டு மக்கள் பெரும் பாதிப்பை சந்திப்பார்கள். பெட்ரோலை பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களும் உபயோகித்து வருகிறார்கள். நான் இல்லதரசியாக இருந்தாலும், குழந்தைகளை பள்ளி அழைத்து செல்வது, சொந்த வேலைக்கு ஸ்கூட்டரை தான் உபயோகிக்கிறேன். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், இருசக்கர வாகன ஒட்டிகள் முதல் ஆட்டோ ஒட்டுநர் வரை, மேல் மட்ட மக்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

யோவான்- ஆட்டோ ஒட்டுநர்:    போர் நடந்தது எல்லாம் பாடபுத்தகத்தில் தான் படித்து இருக்கிறோம். இப்போது தான் அதன் விளைவுகளை சந்திக்கிறோம். ஈரான் –இஸ்ரோல் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வோடு, தட்டுப்பாடும் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தாலே, விலை உயர்வை தடுக்க முடியும். ஆனால் மத்திய, மாநில அரசுகள் அதை செய்யுமா என்றால் கேள்விக்குறி தான்.

சாதான் அஹமது-ஐடி ஊழியர்: பஸ், ரெயில் என பொது போக்குவரத்தை பயன்படுத்துவது குறைந்து, ஆளுக்கு ஒரு டூ விலர் வைத்து இருக்கிறார்கள். தற்போது 50 சதவிகித மக்களிடம் கார் உள்ளது. 80 சதவிகிதத்திற்கும் மேல் டூ விலரை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரிய பாதிப்பாக தான் இருக்கும். ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் வரியை கொண்டு வந்தாலே, தற்போது விலையில் பாதியாக குறைந்துவிடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *