இந்நிலையில் இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
”பெண்கள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடியிடம் மூன்று கேள்விகளை எழுப்புகிறோம்.
பெண்களைப் பாதுகாப்போம் என்பதற்கு பதிலாக குற்றவாளிகளைப் பாதுகாப்போம் என்பதையே பாஜக பின்பற்றுவது ஏன்? மணிப்பூர் பெண்கள் நீதி பெறுவது எப்போது?
பட்டியலினத்தைச் சேர்ந்த ஹாத்ரஸ் பெண்ணோ, உன்னாவ் பகுதியைச் சேர்ந்த மகளோ, எங்கள் பெண் மல்யுத்த சாம்பியன்களோ… பாஜக குற்றவாளிகளையே பாதுகாப்பது ஏன்?
பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 43 வழக்குகள் பதிவாவது ஏன்?” எனப் பதிவிட்டுள்ளார்.