இதை நான் நுட்பமா கேள்விக் கேட்கும்போதுதான் நான் எதிரியாக மாறுறேன்” என்றவர், “‘அறம்’ திரைப்படத்துக்கு மாநில அரசு விருது கொடுக்கிறாங்கனு அறிவிப்பு வந்ததுமே, ‘படத்துக்குக் கொடுப்பாங்க. ஆனா, எனக்கு விருது தர மாட்டாங்க’னு சொல்லிட்டேன். என்கூட இருந்த தம்பி ஒருவரும்,’ இருங்க, இப்போதான் அறிவிக்கிறாங்க. நீங்களாகவே சொல்லாதீங்க’னு சொன்னான்.
ஆனா, நான் கணித்தது போலவே, படத்துக்கு மட்டும்தான் விருது அறிவிச்சிருக்காங்க. எனக்கு விருது அறிவிக்கப்படல.
நான் பொதுவெளியில அவர்களை விமர்சனம் செய்து பேசுறது இதுக்குக் காரணமாக இருக்கலாம். எப்பவுமே, விமர்சனங்கள்தான் அற்புதமான ஜனநாயகம்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “உங்களுக்கு ஆதரவான ஆட்களுக்கே நீங்க விருது அறிவிச்சுக்கோங்க. ஆனா, அதுக்கு அவங்க தகுதியானவங்களா இருக்கணும்.
சிறந்த திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிற படங்களுடைய இயக்குநர்களுக்குத்தான் சிறந்த இயக்குநருக்கான விருதையும் தந்திருக்காங்க. ஆனா, எனக்கு அப்படி கொடுக்கல. சிறந்த படத்தைக் கொடுத்தவர், சிறந்த இயக்குநராக இருக்கமாட்டாங்களா?
இப்போ விருதுகள் அவசர அவசரமாகக் கொடுக்கப்படுறதும் ஒரு தேர்தல் அஜெண்டாதான். கலைஞர்களின் வாக்குகளைத் திரட்டுறதுக்காகத்தான் இதை இப்போ பண்ணியிருக்காங்க.