சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49-வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகக் காட்சியில், இளம் எழுத்தாளர் வெண்பா எழுதிய நூல்கள் மற்றும் கவிதை தொகுப்பு, `Her Stories” பதிப்பக அரங்கில் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இளம் எழுத்தாளர் வெண்பாவிடம் பேட்டி கண்டோம்!
யார் இந்த வெண்பா?
வைஷ்ணவி என்ற இயற்பெயர் கொண்ட சென்னை ஐ.ஐ.டி மெட்ராஸில் ஆய்வுத்துறையில் முனைவர் பட்டம் பெறும் நோக்கில் முன்னகரும் மாணவி “அவள் ஒரு பட்டாம்பூச்சி” என்ற கவிதை தொகுப்பின் மூலமாக எழுத்து உலகில் வெண்பா என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளார். தாயணை, அறிவதுமே ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
“சிறு வயதிலேயே வாசிப்பு பழக்கம் தொடங்கிவிட்டது. என் தந்தை எனக்கு அறிமுகப்படுத்திய நூல் திருக்குறள். எனக்கு தற்போது 1330 குறள்களும் பொருளுடனே தெரியும்.
எனது வாசிப்பு பழக்கம் 10 ஆம் வகுப்பிலிருந்து தீவிரமாகத் தொடங்கியது. பின்னர் சுஜாதாவின் புத்தகங்களையும், வரலாறு, அறிவியல் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதையும் வழக்கமாக்கிக்கொண்டேன். புத்தகம் எழுத வேண்டும் என்ற நோக்கில் எதையும் தொடங்கவில்லை.
ஒருமுறை சிறுகதை கட்டுரை போட்டியில் பங்கு பெறும்போது அதை இறுதியில் முடிக்கும்போது, துன்பியல் சம்பவமாக முடித்தேன். ஆனால் மற்றவர்கள் என்னை இதை மகிழ்ச்சியான ஒரு சிறுகதையாக மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்.
அதன் அடிப்படையில் இன்னும் ஒரு 14 பக்கங்கள் கதையை நீட்டித்தேன். அதுவே, `அவள் ஒரு பட்டாம்பூச்சி’ என்ற சிறுகதையாக மாறியது. பதிப்பாக வரவில்லை அமேசான் கிண்டிலில் வெளிவந்தது.