பெண் என்ஜினீயர் ரெயில் மோதி பலி

Govtj0cbsaa Oi
Spread the love

செல்போன்கள் இப்போது அனைவரது கைகளிலும் தவழ்ந்து கொண்டு இருக்கிறது. தூங்கும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரத்திலும் கைகளில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன. இந்த செல்போன் பயன்பாடே தற்போது பலருக்கு எமனாக மாறி உள்ளது.

Untitled

அதிக நேரம் செல்போனில் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால் மாணவர், மாணவி தற்கொலை என்ற செய்தி தினந்தோறம் நாளிதழ்களில் வருகின்றன.

செல்போனில் பேசியபடி

இதேபோல் செல்போன் பேச்சால் கவனக்கறைவாக வாகனங்களை இயக்குதல், செல்போனில் பேசியபடியும்,காதுகளில் ஹெட்போன் அணிந்தபடி உலகத்தை மறந்து செல்லும் போதும் விபத்தில் சிக்கி இந்த பூமியை விட்டு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிதது வருகின்றன. எனவே தற்போது பல இடங்களில் செல்போனில் பேசியபடி வாகனங்கள் ஓட்டாதீர்…தண்டவாளத்தை கடக்காதீர் என்று அறிவுரை கூறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

Rail44

பெண் என்ஜினீயர் பலி

இந்த நிலையில் பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தைக் கடந்த ஐ.டி. பெண் என்ஜினீயர் யில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்தவர் தாரணி சத்தியா (வயது23).

இவர் இன்று(29-ந்தேதி) காலை பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தைக் கடந்தார்.அந்த நேரத்தில் வந்த அந்தோதியா விரைவு ரெயில் தாரணி சத்தியா மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *