தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் தனது புதிய படத்தில் பெண் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த விஷ்வக் சென் தனது தினேஷ் நாயுடு என்ற பெயரினை ஜோதிடத்தின் பெயரினால் மாற்றிக்கொண்டார். 2017இல் சினிமாவில் நடிகராக அறிமுகமான விஷ்வக் சென் மலையாளத்தில் புகழ்பெற்ற அங்கமாலி டைரிஸ் படத்தினை 2019இல் ரீமேக் செய்தார். இதன் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.
விஷ்வக் சென் நடிப்பில் ஹிட் தி பர்ஸ்ட் கேஸ், ஒரே தேவுடா, காமி படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்தாண்டு வெளியான கேங்ஸ் ஆஃப் கோதாவரி படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லைலா படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஆகன்ஷா ஷர்மா நாயகியாக நடிக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தின் ரீமேக் போலுள்ளதாக தமிழ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ராம் நாராயணன் இயக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.