பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம்.. 18 வயதில் வட்டியுடன் பணம்! – Kumudam

Spread the love

பெண் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் சேமிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலனை உறுதி செய்ய  பல்வேறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்தத் திட்டங்களை முழுமையாக அறிந்து உங்கள் சேமிப்புக்கு ஏற்ற திட்டங்களை தொடங்குங்கள். உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்ற உதவும் முக்கிய சேமிப்பு திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்

பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, சமூக நலன் மற்றும் மக்கள் உரிமைத் துறை வழியாக தமிழக அரசு, முதல் அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.அதன்படி குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ. 50 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும். 

குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால்  தனித் தனியாக ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். 
முதல் பிரசவத்தில் ஒரு பெண்குழந்தை, இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் என்று 3 பெண் குழந்தைகள் இருந்தால் சிறப்பு அனுமதியின்படி ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ 25 ஆயிரம் என ரூ.75 ஆயிரம் வைப்புநிதியாக வழங்கப்படும்.

நிதி உதவி உடனே கிடைக்குமா?

இது குழந்தையின் பெயரில் தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலம் வைப்புத்தொகையாக டெபாசிட் செய்யப்படும்.  ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும்  ஒருமுறை இதைப்புதுப்பிக்க வேண்டும். குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததும் வட்டியுடன் இணைந்து குழந்தையின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும். ஆனால் குழந்தை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வேண்டும். மேலும் வைப்புத்தொகையின் ஆறாவது ஆண்டில் இருந்து குழந்தையின் கல்வி கட்டணத்துக்கு உதவும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1800 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தகுதி:

குடும்பத்தின் ஆண்டுவருமானம் ரூ.72 ஆயிரம் அதிகம் இருக்க கூடாது.  உரிய சான்றிதழ்களுடன் பொதுச்சேவை மையம் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *