இன்று பிளிங்கிட் உடன் நாங்கள் இணைந்து இருப்பதை உணர்கிறோம். சொமாட்டோ நிறுவனத்துக்கு ஈடர்னல் என மறுபெயரிட விரும்புகிறோம். ஆனால், சொமாட்டோ என்ற பெயரிலேயே செயலி இயங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சொமாட்டோ நிறுவனத்தின் பெயர் மாற்றப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு தீபிந்தர் கோயல் மறுப்பு தெரிவித்தார். நிர்வாகப் பணி மற்றும் செயலி பயன்பாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள ஈடர்னல் என்ற பெயர் பயன்படுத்தி வருவதாகக் கூறியிருந்தார். தற்போது அந்தப் பெயரையே சொமாட்டோ நிறுவனத்தின் மாற்றுப் பெயராக அறிவித்துள்ளார்.
ஈடர்னல் என்ற பெயர் பொதுவெளி பயன்பாட்டில் சொமாட்டோவின் மாற்றுப் பெயராக இருக்கும் என்றும் செயலியில் சொமாட்டோ பெயர் மாற்றப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்குச் சந்தையில் ஈடர்னல் என்ற பெயரில் பங்குகள் பரிமாற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ராகிங் தடைச் சட்டத்தை பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ்!