இதனால் வேட்புமனு தாக்கலுக்கான முதல் நாளான இன்றே பலரும் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தனர். முதல்வர் ஸ்டாலினும் இன்று கொளத்தூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்தவகையில் தவெக தலைவர் விஜய்யும் அவர் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
பெரம்பூரில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், நேராக தனது தொகுதியிலிருந்தே பிரசாரத்தை தொடங்குகிறார்.
பெரம்பூர் விவேகானந்தர் சாலை, கொளத்தூர், வில்லிவாக்கம் என மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்யவிருக்கிறார்.
பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமா, நாதக சார்பில் வெற்றி தமிழன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.