நமக்கு எவ்வளவு சிக்கல்கள் எழுந்தாலும் களத்தில் தைரியமாக வேலை பாருங்கள்’ என ஊக்கப்படுத்தும் வகையில் வேட்பாளர்களிடம் பேசியிருக்கிறார். விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று பெரம்பூர் தொகுதியின் நிர்வாகிகளும் பனையூருக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். விஜய் அவர்களிடம் தனியாக பேசுகையிலயே தான் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது .
‘நான் பெரம்பூருக்கு வரலாமாப்பா…’ என ஜாலியாக சிரித்தபடியே விஜய் நிர்வாகிகளிடம் கேட்க, ‘ஒவ்வொரு குடும்பமும் உங்களை அவங்க வீட்டுப் பிள்ளையா பார்க்குறாங்க. எங்க அண்ணன் எங்க தொகுதிக்கே வந்துருக்காருன்னு திருவிழாவா கொண்டாடி ஜெயிக்க வைப்பாங்க’ என நிர்வாகிகள் பதில் கூற விஜய் குஷியாகியிருக்கிறார். ‘நீங்கெல்லாம் செய்யுற எல்லா பணியையும் நான் பார்த்துட்டுதான் இருக்கேன். ரொம்ப நல்லா பண்றீங்க. தொடர்ந்து மக்களை சந்திங்க. நானும் சீக்கிரமே தொகுதிக்கு வரேன்’ எனக் கூறி மகிழ்ச்சியாக அந்த நிர்வாகிகளை அனுப்பி வைத்திருக்கிறார்.
விஜய்யே அவர் பெரம்பூரில் நிற்கப்போவதை உறுதி செய்திருப்பதால் ‘வட சென்னை’ அரசியல் சூடுபிடிக்கத் தொடஙகியிருக்கிறது.
ஏற்கனவே பெரம்பூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் த. வெ. க நிர்வாகிகளும் விஜய் பெரம்பூரில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.