பெரம்பூர் – அம்பத்தூர் இடையே 5, 6-வது புதிய பாதை: ரயில்வே வாரியம் ஒப்புதல் | Railway Board approves 5th and 6th new lines between Perambur to Ambattur

1370191
Spread the love

சென்னை: பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை ரூ.360 கோடி மதிப்​பில் 4-வது முனைய​மாக மாற்​ற​வும், பெரம்​பூர் – அம்​பத்​தூர் இடையே 6.4 கி.மீ. தொலை​வுக்கு 5,6-வது புதிய பாதைகள் அமைக்​க​வும், ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

சென்னை சென்ட்​ரல், எழும்​பூர், தாம்​பரம் ஆகிய ரயில் நிலை​யங்​களில், பயணி​கள் எண்​ணிக்கை அதி​கரித்து வரும் நிலை​யில், கூடு​தல் ரயில்​களை இயக்க வசதி​யாக, பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை புதிய ரயில் முனைய​மாக மாற்ற முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பான அறி​விப்பை தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறி​வித்​திருந்​தார்.

இதற்​காக, தெற்கு ரயில்​வே​யில் நிர்​வாக தரப்​பில் ஒப்​புதல் பெறப்​பட்​டு, பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை ரூ.360 கோடி​யில் 4-வது முனைய​மாக மாற்​ற, ரயில்வே வாரி​யத்​துக்கு கடந்த சில மாதங்​களுக்கு முன்பு பரிந்​துரை செய்​யப்​பட்​டது. இதுத​விர,பெரம்​பூர் – அம்​பத்​துார் இடையே 6.4 கி.மீ., துாரத்​துக்கு 5,6-வது புதிய பாதை ரூ.182 கோடி ரூபா​யில் அமைக்​க​வும் பரிந்​துரை செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், பெரம்​பூரை 4-வது புதிய முனைய​மாக மாற்​ற​வும், கூடு​தலாக 5, 6-வது பாதைகள் அமைக்​க​வும் ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. இது குறித்​து, தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்ட்​ரல் ரயில் நிலை​யத்தில் இடநெருக்​கடி ஏற்​படு​வ​தால், பயணி​கள் தேவைக்கு ஏற்ப கூடு​தல் முனை​யங்​கள் தேவைப்​படு​கின்​றன.

அந்த வகை​யில், சென்னை சென்ட்​ரல் – அரக்​கோணம் வழித்​தடத்​தில், பெரம்​பூர் ரயில் நிலை​யம் முக்​கிய​மான​தாக இருக்​கிறது. 80-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​கள், 150-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​கள் இந்த ரயில் நிலை​யம் வழி​யாக இயக்​கப்​படு​கின்​றன. எனவே, பயணி​களுக்​கான அடிப்​படை வசதி​யுடன் கூடிய, மேம்​பாட்டு பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

பெரம்​பூரில் போதிய நிலம் இருப்​ப​தால், இங்கு ரூ.360 கோடி​யில் 4-வது புதிய முனை​யம் அமைப்​ப​தற்​கான விரி​வான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்​பப்​பட்​டது. ரயில் நிலை​யத்​தின் கூடு​தல் வசதி​களுக்​கான அமை​விடங்​கள், பார்​சல் அலு​வல​கங்​கள், வாகன நிறுத்​த வசதி, வணிக வளாக பகு​தி​கள், சுற்​றுச் சுவர்​கள், மேம்​படுத்​தப்​படும் நுழை​வா​யில்​கள் உள்​ளிட்ட விவரங்​கள் இணைத்து அனுப்​பப்​பட்​டது. தற்​போது, இந்த அறிக்​கைக்கு ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

அதே​போல, இங்கிருந்து ரயில்​கள் இயக்க வசதி​யாக, பெரம்​பூர் – அம்​பத்​துார் இடையே 5,6-வது புதிய பாதைகள் அமைக்க ஒப்​புதல் அளித்​துள்​ளது. இந்த புதிய பாதைகள் அமை​யும்​போது, அம்​பத்​துாரில் இருந்து பெரம்​பூருக்கு தடை​யின்றி ரயில்​களை இயக்க முடி​யும்.

பெரம்​பூரில் தற்​போது, நான்கு நடைமேடைகள் உள்​ளன. கூடு​தலாக இரண்டு நடை மேடைகள் அமைக்​கப்​படும். மேற்​கண்ட பணிகளுக்கு விரை​வில் ஒப்​பந்​தப்​புள்ளி வெளி​யிடப்பட உள்​ளது. வரும் 2028-ல் இந்த புதி​ய முனை​யம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்​டு வர திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *