பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

dinamani2F2025 09 172F4b9f3b212Fkerla
Spread the love

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.

பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியாரின் சிலைக்கு அரசு சார்பில் கோட்டயம் மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *