பெருங்குடி: பிரமாண்டமாக உருவாகும் காசாகிராண்டு ஸ்கைடெக்! 4.28 ஏக்கரில் பிரீமியம் வணிக அலுவலக வளாகம்

Spread the love

காசாகிராண்டு நிறுவனத்தின் வணிக ரியல் எஸ்டேட் பிரிவான ‘காசாகிராண்டு கமர்ஷியல்’, பெருங்குடியில் ‘காசாகிராண்டு ஸ்கைடெக்’ என்ற ஏ-கிரேடு அலுவலக வளாகத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சிறப்பாக நடத்தியது. இவ்விழாவில் காசாகிராண்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. அருண் எம்.என், காசாகிராண்டு குழும நிறுவனங்களின் துணை நிர்வாக இயக்குனர் திரு. சிவ சங்கர் ரெட்டி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 4.28 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகம், சுமார் 10 லட்சம் சதுர அடி அளவில் பிரீமியம் தரத்திலான அலுவலக இடத்தை வழங்கும். நவீன கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளுக்குப் பொருத்தமான, பெரிய மற்றும் விசாலமான தளவமைப்புடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்கள் அலுவலகத்தை விரிவாக்க விரும்பும் பெரிய நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப (IT/ITES) நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் தேவைகளை இது சிறப்பாகப் பூர்த்தி செய்யும்.

எதிர்காலத்திற்கு ஏற்ற பணியிடமாக உருவாக்கப்படும் ‘காசாகிராண்டு ஸ்கைடெக்’, சிறந்த தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட்டான இடவசதிகளைக் கொண்டிருக்கும். இது நிறுவனங்களின் தடையற்ற செயல்பாடுகளுக்கும், நீண்ட காலத் தொழில் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். மேலும், பணியாளர்களின் நல்வாழ்வு, உற்பத்தித் திறன் மற்றும் ஒட்டுமொத்த வேலை அனுபவத்தை மேம்படுத்தும் நவீன பணிச்சூழலை இந்த வளாகம் வழங்கும்.

சென்னையின் ஐடி காரிடாரின் முக்கியப் பகுதியான பெருங்குடியில் அமைந்துள்ள இந்தத் திட்டம், முக்கிய சாலைகள், மெட்ரோ மற்றும் ரயில் வலையமைப்பு மூலம் சிறந்த போக்குவரத்து இணைப்பு வசதியைக் கொண்டுள்ளது. சுற்றிலும் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் இருப்பதால், தொழில்முறைப் பணியாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இது மிகவும் வசதியான இடமாக இருக்கும். மேலும், நிறுவனங்கள் சிறந்த திறமையாளர்களை ஈர்க்கவும், அவர்கள் எளிதாக வந்து செல்லவும் இந்த அமைவிடம் ஏதுவாக இருக்கும். சிறந்த பணித்திறனை வெளிப்படுத்தத் தேவையான அனைத்து வசதிகளும் நிறைந்த சூழல், இந்த வணிக வளாகத்தின் தனிச்சிறப்பாகும்.

இது குறித்து காசாகிராண்டு குழும நிறுவனங்களின் துணை நிர்வாக இயக்குனர் திரு. சிவ சங்கர் ரெட்டி கூறுகையில், “நவீன தொழில்-வணிக நிறுவனங்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வணிக வளாகங்களை உருவாக்கும் எங்களது இலட்சியத்தை காசாகிராண்டு ஸ்கைடெக் பிரதிபலிக்கிறது.

பெரிய அளவிலான தளங்கள், சிறந்த போக்குவரத்து இணைப்பு வசதிகள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன், சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் இந்த வணிகப் பகுதியில் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

 காசாகிராண்டு கமர்ஷியல் நிறுவனம் தற்போது 40 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கும் அதிகமான வணிக வளாகத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் சென்னையில் ஐந்து மற்றும் கோயம்புத்தூரில் ஒன்று என மொத்தம் ஆறு திட்டங்கள் அடங்கும். இந்நிறுவனம் சென்னையில் இரண்டு பிரம்மாண்ட சில்லறை வணிக வளாகத் திட்டங்களையும் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையின் வணிக மற்றும் சில்லறை வணிகப் பிரிவுகளில் தனது இருப்பை வலுப்படுத்துவதுடன், இப்பகுதியில் உயர்தர அலுவலக உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *