தென் அமெரிக்க நாடான பெருவில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெருவின் அந்தமார்காவில் 63 கிமீ தொலைவில் செவ்வாயன்று 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது உள்ளூர் நேரப்படி 1.42க்கு உணரப்பட்டது. இதன் ஆழம் 35 கி.மீ ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தின் மையம் முறையே அட்சரேகை 11.909 தெற்கிலும் மற்றும் தீர்க்கரேகை 74.245 ஆகவும் இருந்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் அபாயப் பகுதியில் பெரு அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.