பெற்றோரை சந்தித்த நடிகர் விஜய்

Golubrzxkaeqnjs
Spread the love

தமிழ் திரை உலகில் முன்னனி நட்சத்திரமாக நடிகர் விஜய் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார்.

அரசியல்

வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். இதற்காக கட்சியில் நிர்வாகிகள் நியமனம், அடுத்த கட்ட அரசியல் நகர்பு உள்ளிட்டவற்றை கட்டமைக்கும் பணியில் நடிகர் விஜய் ஈடுபட்டு உள்ளார்.
இந்த அரசில் பரபரப்புக்கு மத்தியில் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Untitled

பெற்றோருடன் சந்திப்பு

நடிகர் விஜய் தனது தாய் ஷோபனா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரை பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஜய்யின் அரசியில் பிரவேசம் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோதே அவருக்கும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் சிறு சிறு கருத்து மோதல்கள்இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது அரசியல் வருகைக்கு பிறகு தாய்- தந்தையை இன்று(27ந்தேதி) சந்தித்துள்ளார். இதற்கான புகைப்படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் “இன்று” என்ற கேப்ஷனிட்டு பதிவிட்டு உள்ளார்.

வலைதளங்களில் வைரல்

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தை விஜய்யின் ரசிகர்கள், மற்றும் அவரது கட்சியினர் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *