பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்திலுள்ள ஞானவாபி மசூதிக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு – காஷ்மீரிலும், மகாராஷ்டிரத்திலும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஞானவாபி அருகே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலத்தில் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.
அப்போது மரங்களிடையேயிருந்து பாதுகாப்புப் படையினரின் உடை அணிந்து முகமூடியுடன் நுழைந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.